1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. evks elangovan admit in hospital

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார் என்பதும் அவர் அதிமுக வேட்பாளரை விட சுமாராக 60000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.
 
ஆனால் அவர் எம்எல்ஏவாக பதவியேற்ற ஒரு சில நாட்களில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்தது காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்றும் இருப்பதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் குணமாகி வருவதாகவும் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. : டுவிட்டரில் மாற்றம் செய்த ராகுல் காந்தி