செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 26 மார்ச் 2023 (10:03 IST)

ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்: வைரல் புகைப்படங்கள்..!

punjab minister
பஞ்சாப் மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
 
கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது அதில் ரூப் நகர் என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆம் ஆத்மி கட்சியின் ஹர்ஜோத் சிங். வழக்கறிஞரான இவர் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் அரசில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
 
இந்த நிலயில்  32 வயதான இவருக்கு ஐபிஎஸ் அதிகாரியான ஜோதி யாதவ் உடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகுராம் என்ற பகுதியை சேர்ந்த ஜோதி யாதவ் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மான்ஸா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva