தொடர்புடைய செய்திகள்
- ''சர்வாதிகாரம் வென்றதில்லை, சனநாயகம் தோற்றதில்லை''- திருமாவளவன் எம்பி.,
- காங்கிரஸ், பாஜக இல்லாத மாற்று அணி: மம்தாவை சந்தித்த குமாரசாமி..!
- வயநாடு தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்..? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு?
- அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு 1 மாதம் கெடு!
- ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் எப்போது? தேவஸ்தானம் தகவல்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் முன்னாள் முதல்வர் சித்ராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் முன்னாள் முதல்வர் சித்ராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்ராமையா வருணா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு தொகுதியிலும் போட்டியிட தான் மேல் இடத்தில் அனுமதி கேட்டு இருப்பதாகவும் குறித்து மேலிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்
கோலார் மற்றும் வருணா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தற்போது வருணா தொகுதியில் மட்டுமே போட்டியிட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும் கோலார் தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை அடுத்த பாஜகவும் விரைவில் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
