1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (11:46 IST)

ஈரோடு கிழக்கில் கிடைக்கும் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.. செங்கோட்டையன்

sengottaiyan
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவுக்கு கிடைக்கும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டை தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் அதிமுகவின் இரு பிரிவுகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் எடப்பாடி பழனிச்சாமி பிரிவு அதிமுக இன்று அல்லது நாளை வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது ஈரோடு கிழக்கு இடைத்தொகைகளில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva