புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 மே 2020 (08:46 IST)

பப்ஜி விளையாடும் போதே மாரடைப்பு – ஈரோட்டில் மாணவன் உயிரிழப்பு!

ஈரோட்டில் பப்ஜி விளையாடிக் கொண்டு இருக்கும்போதே சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் அருகே உள்ள கமலா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர், சதீஷ்குமார். பாலிடெக்னிக் படிக்கும் இவர் ஊரடங்குக் காரணமாக எப்போதும் மொபைல் போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இது குறித்து பல முறை பெற்றோர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.
 
நேற்று மதியம் நண்பர்களுடன் சேர்ந்து மாட்டுச் சந்தை திடலில் உட்கார்ந்து வழக்கம் போல பப்ஜி விளையாடியிருக்கிறார். அவ்வாறு விளையாடிக் கொண்டு இருக்கும்போதே, மயங்கி விழ, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் நண்பர்கள். வீட்டுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சதீஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம். இதைக் கேட்ட சதீஷின் பெற்றோர் கதறி அழ ஆரம்பித்துள்ளனர்.

வயதை விட அதிக உடல் எடையுடன் காணப்பட்ட அவர், மாரடைப்பால் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்த போதும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தால்தான் உண்மை என்னவென்பது தெரியவரும்.