புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (15:55 IST)

அம்மா உணவகத்தில் இப்படிதான் மக்கள் இடம்பிடிக்கிறார்கள்! கொரோனாவால் ஏற்பட்ட அவலம்!

கொரோனா காரணமாக தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அம்மா உணவகங்களில் செருப்புகளைப் போட்டு இடம்பிடித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றவர்கள் அம்மா உணவகங்களிலேயே உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதனால் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்க மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க, வட்டங்களில் செருப்புகளை போட்டு இடம் பிடித்து வருகின்றனர். இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.