கொரோனா இல்லாத மாவட்டம் ஈரோடு ... அமைச்சர் செங்கோட்டையன் தகவல் !
தமிழகத்தில் 1800கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மக்களை பாதுக்காக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவாகியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
ஈரோட்டில் கொரோனா பாதித்த 4 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
எனவே மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தமுள்ள 70 பேரில் 69 பேர் குணமடைந்துள்ளனர்.ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனால் தமிழகத்தில் கொரொனா இல்லாத முதல் மாவட்டமாக ஈரோடு உருவெடுத்துள்ளது அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.