திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நாளை முதல் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வியகம் அறிவிப்பு

நாளை முதல் பிஇ, பிடெக் உள்பட பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் பெறப்படும் என தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது 
 
பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் நாளைமுதல் www.tneaonline.org  என்ற இணையதளத்தில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிஇ பிடெக் உள்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது 
 
ஏற்கனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது