1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Engineering counselling rank list release today

பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல்! – இன்று வெளியீடு!

பொறியியல் படிப்புக்கான தகுதியில் திடீர் மாற்றம்
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தோர் கலந்தாய்வு முறையில் விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு இன்று மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. திருத்தங்கள் இருப்பின் 4 நாட்களுக்குள் சரிசெய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 25ம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கரணம் தப்பியதால் மரணம்.. ஆரணி கபடி வீரர் பரிதாப பலி!