செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (14:57 IST)

பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு: தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி!

counselling
பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு தேதியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
 
பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வு அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு தான் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது