1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (19:52 IST)

பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கொரோனா  குறைந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததை அடுத்து மார்ச் 7ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் ஜூன் 11 வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜூன் 12ஆம் தேதி நடப்பு செமஸ்டர் எழுத்து தேர்வு தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.