தொடர்புடைய செய்திகள்
- ரம்ஜான் பண்டிகைக்காக பள்ளி தேர்வு தேதி மாற்றம்.. கோடை விடுமுறை தொடங்குவது எப்போது?
- ஏப்ரல் 17ஆம் தேதி ஐபிஎல் போட்டி 16ஆம் தேதிக்கு மாற்றம்.. என்ன காரணம்?
- விஜய்யின் The GOAT படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
- செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
- 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.. தமிழகத்திற்கு வந்த சோதனை..!
பொறியியல் கல்லூரிகளில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. புதிய தேதிகள் என்ன?
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுகள் ஜூன் 6 ஆம் தேதி முதல் நடத்தப்படும் எனவும், நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்குகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் இந்த தேதி மாற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லூரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளதாகவும், ஆதலால் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஜூன் 6 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
