ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:48 IST)

ஏப்ரல் 17ஆம் தேதி ஐபிஎல் போட்டி 16ஆம் தேதிக்கு மாற்றம்.. என்ன காரணம்?

ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் போட்டி ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 16ஆம் தேதி நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்தது 
 
இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி ராமநவமி என்பதால் அன்றைய தினம் போட்டியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில் தற்போது அந்த போட்டி ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ஏப்ரல் 16ஆம் தேதி என்று நடைபெற இருந்த குஜராத் மற்றும் டெல்லி போட்டி ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு கொல்கத்தா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran