1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Enforcement officer fix notice in ashok kumar house

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நோட்டீஸ்: அமலாக்கத்துறை அடுத்த அதிரடி..!

செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தற்போது  காவலில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராக வேண்டும் என பலமுறை சமன் அனுப்பியும் அவர் இன்னும் ஆஜராகாமல் உள்ளார். 
 
இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் போட்டியுள்ளனர் 
 
 செந்தில் பாலாஜியிடம் தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவரது சகோதரர் ஆஜர் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மெய்சிலிர்க்கும் இறை அனுபவம்.. ஶ்ரீ ரமண மகரிஷி இல்லத்தில் அண்ணாமலை..!