வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (21:45 IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-மெயில் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

email
தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு இ-மெயில் கேட்காத நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இ-மெயில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு இ-மெயில் முகவரி தேவைப்படுவதால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் இமெயில் முகவரி பதிவு செய்ய வேண்டும் என்றும் இதுவரை ஈமெயில் முகவரி இல்லாதவர்கள் உடனடியாக ஒரு முகவரியை தொடங்கி ஜனவரி 12ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva