1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (08:30 IST)

சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து; ரயில் சேவை பாதிப்பு

சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் கடந்த 7 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவு ரயில் பாதையில் ஒரு சில புறநகர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7 மணிநேரமாக இதே நிலை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.வேலைக்கு செல்லும் பயணிகள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் இன்னும் மூன்று நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில்கள் புறப்படும் என சென்னை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.