1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Crumbles: Sensex Plummets by 960 Points

இந்திய பங்குச்சந்தையில் கடும் அதிர்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு

Stock Market Crash
இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை சந்தித்தது, இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 960 புள்ளிகள் வரை சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 311 புள்ளிகள் சரிவை கண்டது. இந்தத் திடீர் வீழ்ச்சியால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.97 பைசாவாக சரிந்ததே இந்த வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 
 
குறிப்பாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லை போர் பதற்றமும் சந்தையில் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாகப் பங்குகளை விற்பனை செய்ததால் சந்தை தொடர்ந்து சரிவை நோக்கி சென்றது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்திய தாலிபான்கள்.. எல்லை பகுதியில் போர் பதற்றம்!