திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2017 (13:43 IST)

கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பேருந்து விபத்தில் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில்  பேருந்து விபத்துக்குள்ளானதில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரைச் சேர்ந்த சிலர் மனோவோக் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். புறப்பட்டு சில மணிதுழியில் எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.