ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (14:29 IST)

‘காலா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷின் ‘வடசென்னை’

ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், தனுஷின் ‘வடசென்னை’ படம் எடுக்கப்பட இருக்கிறது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. இந்தப் படத்தில் ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், ஈஸ்வரி ராவ்,  சாக்‌ஷி அகர்வால், நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
 
இந்தப் படத்தில், மும்பையில் வாழும் தாதாவாக ரஜினி நடித்துள்ளார். எனவே, மும்பையின் தாராவி பகுதிக்கே சென்று  பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். அங்கு எடுக்க முடியாத காட்சிகளை, சென்னையிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் மும்பை போன்று செட் போட்டு எடுத்தனர்.
 
தற்போது அந்த இடத்தில் தனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கான செட் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இருந்த ‘காலா’ செட்டில் சிலபல மாற்றங்களைச் செய்து, வடசென்னை ஏரியா போல மாற்றி வருகின்றனர். வெற்றிமாறன் இயக்கிவரும் இந்தப்  படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா இருவரும் நடிக்கின்றனர்.
 
இரண்டு படங்களையுமே தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.