திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2017 (15:41 IST)

திமுக உயர்நிலைக் குழு கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து வரும் டிசம்பர் 29ம் தேதி திமுக உயர்நிலைக் குழு கூடுகிறது. 
ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான தினகரன் இமாலய வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனன், கிட்டத்தட்ட தினகரன் பெற்ற வாக்குகளில் பாதியைத்தான் பெற்றுள்ளார். திமுக சார்பில் நின்ற மருது கணேஷ் டெபாசிட் இழந்தார். இதுகுறித்து பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆர்கே நகரில் தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்ய தவறிவிட்டது எனக் கூறினார். 
 
இதனையடுத்து திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அண்ணா அறிவாலயத்தில் வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும்  கூட்டத்தில்,  கட்சி நிர்வாகிகள்  அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.