திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:10 IST)

234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பொதுமக்கள்!

234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பொதுமக்கள்!
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் 
வாக்குப்பதிவு தொடங்கியது
 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்கு முகவர் பணியாளர் முன்னிலையில் வாக்கு மாதிரி வாக்குப்பதிவு 7 மணிக்கு முன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தேர்தல் நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.