திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (06:40 IST)

வாக்குச்சாவடிகளில் அதிகாலையிலேயே குவிந்த கூட்டம்: இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு!

தமிழகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்குகின்றன. தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில் இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது
 
தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் மிக அதிக அளவில் இருப்பதால் அதிகாலையிலேயே வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சென்னையின் பெரும்பாலான இடங்களில் நீண்ட வரிசையில் தற்போது வாக்காளர்கள் நின்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது 
 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், மற்றும் கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் மொத்தம் 86 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளதாகவும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.