புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (06:55 IST)

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் காத்திருக்கும் அஜித்-ஷாலினி!

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் காத்திருக்கும் அஜித்-ஷாலினி!
தமிழகத்தில் இன்றைய காலை 7 மணிக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்கு சாவடிகளில் காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
குறிப்பாக திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார் என்றும் மாஸ்க் அணிந்து அவர் வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கவிருக்கும் நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு 6 மணிக்கே மனைவி ஷாலினி உடன் வந்திருக்கும் அஜித் தனது கடமையை ஆற்ற காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல வாக்குச்சாவடிகளில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் வரிசையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.