ஏடிஎம்-ல் பணம் நிரப்ப வந்த அதிகாரிகளிடமிருந்து ரூ.10 லட்சம் திருடிய நபர்
டெல்லியில் ஏடிஎம்-ல் பணம் நிரப்ப வந்த அதிகாரிகளை மிரட்டி ஒரு நபர் பணம் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு டெல்லியின் வஜிரராபாத் மேம்பாலம் அருகில் தனியார் நிறுவன வங்கி ஏடிஎம் இருக்கிறது. இந்த ஏடிஎம்மில் பணத்தை நிரப்ப வேண்டி, அந்த வங்கியைச் சேர்ந்த இரு அதிகாரிகள் வேனில் இருந்து எடிடிஎம்மிற்குள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொண்டு வந்தனர்.
அப்போது, முகமூடி அணிந்த ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் வந்து, பாதுகாவலரை சுட்டார். இதைப் பார்த்துப் பயந்த வேனில் ஓட்டுனர் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர், அதிகாரிகளிடமிருந்து ரூ.10லட்சம் பணப்பையை எடுத்து கொண்டு அந்த நபர் சென்றுவிட்டார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.