1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (11:20 IST)

தமிழகத்திற்கு வரும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகின்றன. 

 
உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்ப கட்டத்தை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆங்காங்கே தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக மத்திய அரசு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் தமிழகத்துக்காக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை 3.20 மணிக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகின்றன. தமிழகத்தில் 1.90 லட்சம் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.