செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (18:51 IST)

ஓசூர் தொகுதி காலி: தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

கல்வீச்சு மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நிலையில் அவரது எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது. தனக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளதால் இந்த தொகுதி காலி என்பது உறுதியாகிவிட்டது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் பாலகிருஷ்ண ரெட்டியின் மனு தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் தற்போது ஓசூர் தொகுதியையும் சேர்த்து காலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. காலியான 21 தொகுதிகளுக்கும் வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது