1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Election Commission bans exit poll till april 29th

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிற்கு தடா போட்ட தேர்தல் ஆணையம் !

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட வருகின்ற 29 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை.

 
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்காங்கே தேர்தலில் சில குளறுபடிகள் நடந்தாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
 
இந்நிலையில்,  நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மார்ச்  27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 
 
அந்த வகையில், தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட வருகின்ற 29 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலை உடைத்த தேர்தல் அதிகாரிகள்: மயிலாடுதுறையில் பரபரப்பு