திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 28 ஜனவரி 2019 (22:51 IST)

மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் ரத்து! கனிமொழி அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் முழு கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக எம்பி கனிமொழி இன்று அறிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுடன், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வர உள்ளதால் இந்த 21 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சி கவிழ்ந்து திமுக ஆட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர்ந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என்று கனிமொழி எம்பி அறிவித்துள்ளார். மேலும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம், கடலில் தூண்டில் வளைவு பாலத்தை சீரமைப்பது, மக்களை பாதிக்கின்ற எந்த தொழிலையும் தமிழகத்தில் அனுமதிக்காமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கனிமொழி வாக்குறுதி அளித்துள்ளார்.