செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (22:37 IST)

அஜித்தின் அரசியல் முடிவு குறித்து கனிமொழி கருத்து

அஜித் ரசிகர்கள் ஒருசிலர் பாஜகவில் இணைந்ததால் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களையும், முடிந்தால் அஜித்தையும் தன் பக்கம் இழுத்துவிடலாம் என்ற ரீதியில் பேசிய தமிழிசையின் பேச்சுக்கு பதிலடியாக வந்தது அஜித்தின் அறிக்கை

அந்த அறிக்கையில் அவர் மிக தெளிவாக தனக்கு அரசியல் ஆசை துளியும் கிடையாது என்று விளக்கியதோடு, தனது ரசிகர்களும் கல்வி, தொழில் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மற்ற நடிகர்களையும் வசை பாடவேண்டாம் என்று அஜித் கூறியதை அவரது ரசிகர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர். அஜித்தின் அறிக்கைக்கு பின் ரஜினி குறித்தோ, பேட்ட படம் குறித்தோ நெகட்டிவ்வாக ஒரு பதிவு கூட டுவிட்டரில் வரவில்லை. மேலும் நேற்று பாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்களும் அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அரசியல் குறித்த அறிக்கை குறித்து கருத்து கூறிய கனிமொழி எம்பி கூறியதாவது: அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு என்று கூறியுள்ளார்