ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (20:28 IST)

கோவை பாலியல் சம்பவம்: அறிக்கை தர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு !

கோவையில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இது குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளி கல்வி துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் வரும் 23ஆம் தேதி கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்