எடப்பாடி பழனிச்சாமி அடிமைதான்: மாணவி வளர்மதி விளாசல்!
எடப்பாடி பழனிச்சாமி அடிமைதான்: மாணவி வளர்மதி விளாசல்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த வளர்மதியிடம் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் வளர்மதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகார வர்க்கத்தின் அடிமைதான் என விளாசியுள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி வளர்மதி மீது அதே சேலம் மாவட்டத்தை சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அவர் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்ததாக குற்றம்சாட்டியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த வளர்மதி அதிமுக ஆட்சியின் போது அதிமுகவினரால் ஏற்படுத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை குறிப்பிட்டு அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன தகுதி இருக்கு என கேள்வி எழுப்பினார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி எங்க ஊர்க்காரரா இருந்தா என்ன? முதல்வரா இருந்தா என்ன? அவரும் அதிகார வர்க்கத்தின் அடிமைதான். அவருக்குத் தேவை ஆளும் நாற்காலி. அதற்காகத்தானே இப்படி அடித்துக்கொள்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தார்.