வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (10:47 IST)

பாஜக-அதிமுக கூட்டணி: பரிசீலிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

பாஜக-அதிமுக கூட்டணி: பரிசீலிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அரசியல் கட்சியினர் பலரும் கூறுகின்றனர். வரும் தேர்தல்களில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என பலரும் அடித்து கூறுகின்றன.


 
 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரத்தில் இன்று அளித்த பேட்டியில், உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார். முதல்வர் பழனிச்சாமியின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் எங்களுடன் தான் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
முன்னதாக நேற்று சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக பாஜக உடன் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பதில் தவறும் இல்லை, பிரச்சனையும் இல்லை என கூறினார். இந்நிலையில் முதல்வரும் பாஜக கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளது ஏற்கனவே இந்த கூட்டணி அமைந்துவிட்டது என்றே தோன்றுகிறது.