1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK will alliance with BJP in local body election

அதிமுக, பாஜக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி: அமைச்சர் பேட்டி!

அதிமுக, பாஜக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி: அமைச்சர் பேட்டி!

அதிமுக
தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அரசியல் கட்சியினர் பலரும் கூறுகின்றனர். வரும் தேர்தல்களில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என பலரும் அடித்து கூறுகின்றன.


 
 
இந்நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டால் அதில் எந்த தவறும் இல்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே அது நீக்கப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்பது தெரியாது. அதே நேரத்தல் பாஜக உடன் கூட்டணி வைப்பதில் எந்த தவறும் இல்லை. நாங்கள் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டிருக்கிறோம்.
 
திமுக கூட கடந்த காலங்களில் பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து முடிவெடுப்பர். யாருடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
சித்து வேலைகள் செய்தாலும் அது நடக்காது: மு.க.ஸ்டாலினை விளாசும் அமைச்சர் ஜெயக்குமார்!