1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Jayakumar Slams MK Stalin

சித்து வேலைகள் செய்தாலும் அது நடக்காது: மு.க.ஸ்டாலினை விளாசும் அமைச்சர் ஜெயக்குமார்!

சித்து வேலைகள் செய்தாலும் அது நடக்காது: மு.க.ஸ்டாலினை விளாசும் அமைச்சர் ஜெயக்குமார்!

சித்து வேலை
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் ஆட்சியை இழக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரை வலியுறுத்தி வருகின்றன.


 
 
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நீடிக்காது எனவும் விரைவில் கலைந்து, ஆட்சி மாற்றம் வரும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
 
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், யார் எந்த சித்து வேலைகள் செய்தாலும் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்ற அவர்களின் எண்ணம் மட்டும் நடக்காது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட யாருமே சட்டமன்ற தேர்தலை விரும்பவில்லை. மு.க. ஸ்டாலின் மட்டுமே தேர்தலை விரும்புகிறார் என தெரிவித்தார்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
பாஜக-அதிமுக கூட்டணி: பரிசீலிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!