வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (17:43 IST)

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஒரு விளையாட்டு பிள்ளை: ஜான் பாண்டியன்

john pandian
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஒரு விளையாட்டு பிள்ளை என்றும் அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் இன்று அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்

அதன் பிறகு அவர் செய்தியாளர்களின் பேசியபோது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும் பிரச்சாரத்திற்கு செல்லும் போது அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு எங்களை வரவேற்கிறார்கள் என்றும் இது போன்ற வரவேற்பை எந்த ஒரு வேட்பாளரும் கண்டதில்லை என்றும் தெரிவித்தார்

பொய் வாக்குறுதிகளை அழைத்து ஏமாற்றும் பேர்வழிகளை அழிப்பதற்காக தான் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜகவுடன் இணைந்து போராடி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது 'விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார் என்றும் பிரதமர் மோடி பற்றி விளையாட்டு தனமாக பேசுகிறார் என்றும் அவருக்கு சிறு வயது என்பதால் அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறினார்.


Edited by Mahendran