1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy says about udhayanidhi

உதயநிதி அரசியலில் ஒரு கத்துக்குட்டி: அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி..!

உதயநிதி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஒரு கத்துக்குட்டி என இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் மதுரை மாநாட்டை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம் குறித்து இன்று பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி ’மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.  மாநாடு என்றால் என்ன என்று எடுத்துக்காட்டும் வகையில் திமுக இளைஞர் அணி மாநாட்டை நடத்துவோம் என்றும் தெரிவித்தார். 
 
ஆனால் அந்த மாநாடு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவை விமர்சனம் செய்திருக்கே உங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அரசியலில் கத்துக்குட்டியாக இருந்து கொண்டு அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டி