வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:18 IST)

அதிமுக பொதுக்குழு - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

edapadi palanisamy
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடந்து வரும் நிலையில், இன்றைய பொதுக்குழுவின் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தை முறையாக கையாளாத திமுக அரசுக்கு கண்டனம்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும்  இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்.

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களவையில் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜன நாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற மறுவாழ்வு அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. இதையுணர்ந்து தேவையான  நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்க முன்வர வேண்டும்’’ என தெரிவித்துள்ளது.

அதிமுகவின் 23 தீர்மானங்களில் பெரும்பாலானவை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டவை ஆகும்.