திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:58 IST)

வம்பு சண்டைக்கு செல்ல மாட்டோம், ஆனால் வந்த சண்டையை விடமாட்டோம்: எடப்பாடி பழனிசாமி!

நாங்கள் வம்பு சண்டைக்கு செல்ல மாட்டோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் வந்த சண்டையை விட மாட்டோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய போது அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். 
 
நாங்கள் வம்பு சண்டைக்கு போவதில்லை ஆனால் அதே நேரத்தில் வந்த சண்டையை விடுவதில்லை, நாங்கள் அமைதியை நாடுபவர்கள், ஆனால் அதே நேரத்தில் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதை நம்மை சீண்டி பார்க்கும் இந்த சிற்றறிவு மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேசி உள்ளார்.
 
அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே இதுவரை பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva