1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy dicuss about admk mlas

சிவி சண்முகம், வேலுமணி மீது நடவடிக்கையா?!.. பழனிச்சாமி ஆலோசனை...

eps velumani
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்று எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அந்த கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்க துவங்கியிருக்கிறார்கள்.

இதையடுத்து அதிமுக இரண்டாக உடைந்திருக்கிறது. அதேநேரம் நாங்கள் ஆட்சியை உடைக்க விரும்பவில்லை. அதிமுக ஏன் தொடர் தோல்வியை சந்திக்கிறது என்பது பற்றி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யவேண்டும்.. மேலும், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதோடு இன்று சட்டசபையில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதுவும் பழனிச்சாமிக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில், சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பழனிச்சாமி தற்போது முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்..