திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 மே 2023 (11:06 IST)

தமிழகத்தில் கள்ளச்சாராய கலாசாரம் தலைதூக்கியுள்ளது: ஈபிஎஸ் கண்டனம்..!

தமிழகத்தில் கள்ளச்சாராய கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் மூன்று பேர் மரணம் அடைந்த நிலையில் மேலும் 16 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் மூன்று பேர் மரணம் அடைந்த செய்தி வருத்தத்துக்குரியது என்றும் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கள்ளச்சாராய கலாச்சாராயம் தமிழகத்தில் தலைதூக்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva