வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 14 மே 2023 (11:20 IST)

தலை தூக்கும் கள்ளச்சாராயம்? 3 பேர் பலி! – விழுப்புரத்தில் அதிர்ச்சி!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்து 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை அடுத்த எக்கியார் குப்பம் என்ற கிராமப்பகுதியில் ரகசியமாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வந்துள்ளது. அங்கு கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 7 பேர் வீட்டிற்கு சென்ற நிலையில் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள் 7 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதில் சுரேஷ், தரணிதரன் மற்றும் சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் அப்பகுதி கிராமங்களில் விசாரணை நடத்தியதில் கள்ளச்சாராயம் அருந்தி மயங்கிய மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மொத்தமாக 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கள்ளச்சாராயம் விற்ற அமரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K