1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (19:28 IST)

வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

திமுக தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார் 
 
நீட்தேர்வு விளக்காக அதிமுக கொண்டு வந்த அதே தீர்மானத்தை திமுக தற்போது மீண்டும் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார் .மேலும் நகை கடன் தள்ளுபடிக்கான வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது குறித்த குற்றச்சாட்டு குறித்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார்
 
இன்று சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் எடப்பாடிபழனிசாமி அளித்த இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது