1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (08:22 IST)

சுவிஸ் வங்கியில் ஸ்டாலின் குடும்பத்தினர் முதலீடு – தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி புகார் !

கொள்ளையடித்த பணத்தையெல்லாம் திமுக சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாங்குநேரி சென்றுள்ள அவர் நேற்று அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அவர் தனது முதல்நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் ‘ நாங்குநேரி தொகுதியைக் கைவிட்டுச் சென்ற காங்கிரஸுக்கு அதிமுக வெற்றியின் மூலம் பாடம் புகட்டுங்கள். அதிமுக வேட்பாளர் நாராயணன் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர். அவரை நீங்கள் எளிதில் அனுகலாம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரோ சென்னையில் வசிக்கிறார். கோடிஸ்வரர்.. அவரை நீங்கள் பார்க்கக் கூட முடியாது.

ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். சுவிஸ் வங்கியில் டெபாஸிட் செய்திருப்பவர்களின் பட்டியலை மோடி பெற்றுள்ளார். அந்தப் பட்டியலில் திமுகவினரும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் ஸ்டாலின் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்.எங்களை வெளிநாட்டுக்கு செல்வது ஏன் எனக் கேட்கும் ஸ்டாலின் ஏன் அடிக்கடி லண்டன் செல்கிறார்’ எனக்  கேள்வி எழுப்பியுள்ளார்.