புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2022 (10:40 IST)

டிவிட்டரில் எடப்பாடி கே பழனிச்சாமி செய்த மாற்றம்… வைரலாகும் புகைப்படம்!

டிவிட்டரில் எடப்பாடி கே பழனிச்சாமி செய்த மாற்றம்… வைரலாகும் புகைப்படம்!
அதிமுகவின் முன்னாள் முதல்வர் கே பழனிச்சாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்துள்ள மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் முடிவுக்கு வந்துவிட்டதாக சி வி சண்முகம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து தற்போது டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை நீக்கியுள்ளார். இது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டிவிட்டரில் எடப்பாடி கே பழனிச்சாமி செய்த மாற்றம்… வைரலாகும் புகைப்படம்!