திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (07:35 IST)

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி!

BJP
மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை உத்தவ்தேவ் தாக்கரே ராஜினாமா செய்ததையடுத்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருவதாகவும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களுடன் பாட்னாவில் பாஜக பிரமுகர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் வெளிமாநிலங்களில் இருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் இப்போதைக்கு மும்பைக்கு வர வேண்டாம் என்றும் தாங்கள் சொல்லும் போது வந்தால் போதும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று என்ற நிலை இருப்பதால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.