திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (07:42 IST)

புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் வீட்டில் விடிய விடிய சோதனை..அமலாக்கத்துறை அதிரடி

புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விடிய, விடிய அமலாக்கத்துறை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று 8 இடங்களில் சோதனை நடந்த நிலையில், கந்தர்வகோட்டை அறியானிப்பட்டி, புதுக்கோட்டை தனியார் ஆர்க்கிடெக் நிறுவனத்தில் நடந்த சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற  6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva