100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்
100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்றும், அதில் உண்மையில்லை என மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு வீட்டு உரிமையாளருக்கு 1க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் 100 யூனிட் மட்டும் மானியம் என்றும், வீட்டின் உரிமையாளருக்கு மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து என்றும், ஆனால் அதே நேரத்தில் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து என்பது தவறானது என்றும் மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் ஒரு வீட்டிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் மற்ற வீடுகளுக்கு மானியம் வழங்கப்படாது என்றும் வதந்தி பரவி வந்தது.
இதன் காரணமாக ஒரு காம்பவுண்டில் பத்து வீடுகள் இருந்தால் அதில் ஒரு வீட்டுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இந்த செய்தியை தான் தற்போது மின்வாரியத்துறை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva