மோடிக்கு எதிராக மு.க.ஸ்டாலின், மோடியின் தொகுதியில் துர்கா ஸ்டாலின்
இன்று கரூரில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் பிரமாண்டமான விழா நடந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியதை அடுத்து மிகவும் உற்சாகத்துடனும் ஆவேசமாகவும், மத்திய மாநில அரசுக்கு எதிராக ஸ்டாலின் பேசினார். குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக ஸ்டாலினின் பேச்சில் அனல் பறந்தது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் காசி மற்றும் வாரணாசி கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருவதாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
துர்கா ஸ்டாலினுடன் .அவருடன் அவரது அக்கா பார்வதி, அவரது கணவர் சண்முகசுந்தரம் மற்றும் தங்கை ஜெயந்தி, துர்காவின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி ஆகியோர்கள் உடன் சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் சென்று வழிப்பட்டு வரும் கோவில்கள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் பிரதமர் மோடியை கடுமையாக ஸ்டாலின் பேசி வரும் அதே நாளில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மோடியின் தொகுதியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.