திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (13:15 IST)

என்ன ஆனது துரைமுருகன் உடல்நிலை ? – அப்போல்லோவில் செக்கப் !

கடந்த மே 23 ஆம் தேதி உடலநலக் குறைவு காரணமாக அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சிறுநீர் தொற்று பிரச்சனைகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று  திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவுக் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்று மாலையே வீடு திரும்பினார்.

அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு முழுவதும் குணமாகாமல் வந்து வந்து போய்க்கொண்டிருப்பதாகவும் சிறுநீர்த் தொற்று பிரச்சனைகள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் வேலூருக்கு செல்லாமல் சென்னையிலேயே தங்கி அப்போல்லோவுக்கு சென்று உடல்நிலையை சோதனை மேற்கொண்டு வருகிறார்.