செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (07:38 IST)

ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவியா? ஈபிஎஸ் எதிர்ப்பால் அதிமுகவில் சலசலப்பு!

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி பெற ஈபிஎஸ் மறுத்துவருவதாக கூறப்படுவதால் அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற ஒரே எம்பி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. இதனால் அவருக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தருவதில் ஓபிஎஸ் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் டெல்லி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமைச்சர் பதவியும் ஓபிஎஸ் மகனுக்கு கிடைத்துவிடும் நிலையும் உள்ளது
 
ஆனால் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தருவதில் முதல்வர் ஈபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். மூத்த தலைவர் வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கேட்டு பெறலாம் என்பதே அவரது எண்ணமாக உள்ளது. இதனை பல மூத்த அதிமுக தலைவர்கள் ஆதரிக்கின்றனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே எம்பியான தனது மகனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தருவதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பதுபோல் தெரிகிறது. டெல்லி தலைவர்களும் ஓபிஎஸ்க்கே ஆதரவு தருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அதிமுக தரும் ஒரு ராஜ்யசபா எம்பியை பெறவிருக்கும் அன்புமணி தனக்கும் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று பாஜகவில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது